போருக்கு எதிரான பொங்கல்

வ்வொரு தெருவும்

வண்ணக் கோலங்களால்

நிறைந்திருக்கின்றன

ஒவ்வொரு கோலமும்

சூரியனின் ஒளியில்

ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன

அறுவடை செய்யப்பட்ட மஞ்சளையும்

அறுவடை செய்யப்பட்ட கரும்பையும்

அறுவடை செய்யப்பட்ட அரிசையையும்

வாங்கிக் கொண்டு

ஓளிசிந்தச் சென்று கொண்டிருக்கிறார்கள்

மனிதர்கள்

மகிழ்ச்சி நிறைந்த

மனிதர்களின் முகங்களைப்

பார்ப்பதில்தான்

பேரானந்தம் நிறைந்திருக்கிறது

யுத்தங்களால்

ஒவ்வொரு மனிதனையும்

துயரத்திற்குள் தள்ளத்துடிக்கும்

அந்த முட்டாள்களுக்கு

எதுவும் புரியப்போவதில்லை

பொங்கலோ பொங்கல்

கொண்டாடுங்கள்

இனிக்கட்டும் வாழ்க்கை

சிறக்கட்டும் வாழ்க்கை

புள்ளிகளை இணைக்கும்

கோலத்தைப்போல

இணைந்து கொள்ளுங்கள்

உங்களைப் பிரிக்கத் துடிப்பவர்கள்

உங்களை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்

பேரசை நிறைந்த

அவர்களின் கனவுகளை

நிறைவேற விடாதீர்கள்

தேசிய இனங்களின்

தனித்த அடையாளங்களை

அழிக்கத் துடிக்கும்

வல்லரசின் கரங்களை

முறித்துப் போடுங்கள்

நாம் என்பது

நாம் மட்டுமல்ல

மொழியும் கலாச்சாரமும்

பண்பாடும் என

எல்லாமும் சேர்ந்ததுதான்

இந்த மனிதகுலத்திற்குப்

போர் தேவையில்லை

பொங்கலோ பொங்கல்

இந்த மனிதகுலத்திற்கு

ஆயுதங்கள் தேவையில்லை

பொங்கலோ பொங்கல்

போருக்கு எதிராகப்

பொங்கட்டும் இந்தப் பொங்கல்

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment