மனிதகுல விரோதி
previous post
இரவோடு இரவாக
திருடனைப் போல
வெனிசுலாவிலிருந்து
அந்த நாட்டின் அதிபரைக்
கடத்திச் செல்கிறது
அமேரிக்கா
சும்மா இருக்கவில்லை
உலகம்
கண்டனம் தெரிவிக்கத்தான் செய்கிறது
நாடு கெடுக்கும்
தன்னுடைய
உளவு அமைப்பின் மூலம்
ஈரானில்
உள்நாட்டுக் கலவரத்தை
உருவாக்கி விடுகிறது
அமெரிக்கா
அது போதாதென்று
அமெரிக்க முதலாளி
தன்னுடைய
இணைய சேவையை
இலவசமாகக் கொடுத்து
ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்த
அவசரப்படுகிறான்
உலகம்
கண்டனம் தெரிவிக்காமல் இல்லை
ஆனால்
காலம் முழுக்க
எத்தனை போர்கள்
எத்தனை ஆட்சிக்கவிழ்ப்புகள்
எத்தனை படுகொலைகள்
எத்தனை பொருளாதார தடைகள்
எத்தனை மனிதவிரோத செயல்கள்
இத்தனையும்
செய்து கொண்டிருக்கும்
மனிதகுலத்தின் விரோதி
அமெரிக்காவை
என்ன செய்யலாம்
என் அன்புத் தோழர்களே
கண்டனம் தெரிவிக்கலாமா!
ஜோசப் ராஜா