மறந்திருக்க மாட்டீர்கள்
சாத்தான்குளத்தை
தமிழகம் மட்டுமல்ல
இந்த மானுடத் திரளே
வெட்கித் தலைகுணியக் கூடிய
சம்பவம் நடந்த இடம்
பொய் சொன்னார்கள்
அதிகார அடுக்கின்
மேலிருந்து கீழிருந்து
உடல்நிலை சரியில்லாமல்
இறந்து விட்டார்கள் என்று
எல்லோரும் பொய் சொன்னார்கள்
ஆனாலும் பாருங்களேன்
நீண்ட விசாரணைக்குப் பிறகு
தேர்தலுக்கு முன்பாகவே
தந்தை மகனைக்
கண்மூடித்தனமாகத் தாக்கிய
காவலர்கள் அத்தனைபேரும்
குற்றவாளிகளே என்று
தீர்ப்பு வெளியாகியிருக்கிறது
இந்த மாத இறுதியிலேயே
தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது
அந்தக் கொடூரமான மனிதர்களுக்கு
கொடுக்கப்படும் தண்டனை
இனி உயிரெடுக்கத் துணியும்
ஒவ்வொரு காவலர்க்கும்
பாடமாக அமைய வேண்டும்
முயற்சியில் இருக்கும்
திரைக்கதைக்காக
இந்த வழக்கின் முழுமையையும்
வாசித்திருக்கிறேன்
எத்தனையோ சாட்சிகள்
எத்தனையோ விசாரணைகள்
எல்லாமும் ஞாபகம் வருகிறது
நீதிக்காகப் போராடிய
அம்மாவின்
சகோதரியின்
கரம்பற்றிக் கொள்கிறேன்
இரவை அதிரச்செய்த
அந்தக் கதறல்
எனக்குக் கேட்கிறது
பொழுதெல்லாம்
நீங்காமல் இருந்த
அவர்களின் வலியை
இப்போது உணர்கிறேன்!
ஜோசப் ராஜா
