இசை மேதைகளான ஹரிபிரசாத் செள்ராஷியா, பிரிஜ் பூஷன் காப்ரா, சிவகுமார் ஷர்மா ஆகிய மூவரும் சேர்ந்து இசையமைத்துள்ள Call of the Valley இசைத் தொகுப்பானது 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது. சில வருடங்களுக்கு முன்னால் என்னுடைய குருநாதரின் வார்த்தைகளைத் தொடர்ந்து அந்த இசையைக் கேட்க ஆரம்பித்தேன். முடியவில்லை. முடிவே இல்லை. இன்று வரையிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மேய்ப்பனின் ஒருநாள்தான் இசையாக மாற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு நேரத்திற்கும் அதற்கான ராகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். வாழ்வில் நூறு முறையாவது கண்டிப்பாக கேட்க வேண்டிய இசை. கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.
அதைத்தொடர்ந்து, ஒருநாள் சங்காலத்தைச் சேர்ந்த சக கவிஞரான கல்லாடனாரின் கவிதை ஒன்று கண்ணில் பட்டது. அந்தக் கவிதையின் ஒரு வரி நெஞ்சில் ஒட்டிக்கொண்டு அகலாமல் இருந்துகொண்டது. ”நசைஇச் சென்ற நெஞ்சே” என்பதுதான் அந்தவரி. அர்த்தம்! உங்கள் காதலியைப் பார்க்கப் புறப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் நினைவுகள் உங்களுக்கு முன்னமே அங்கு சென்றுவிடுமல்லவா! அதுதான்.
இந்த நீண்ட கவிதைக்குத் தொடக்கமாக இருந்தவை, இந்த இரண்டு விஷயங்கள்தான். கவிதையைக் கேளுங்கள். காற்றைப்போல கடத்திச் செல்லுங்கள்.
காதலர் தின வாழ்த்துகள் தோழர்களே.
ஜோசப் ராஜா

1 comment
சிறப்பு தோழர். இத்தனை நீளமான நிஜமான உள்ளுணர்வை காதலாய் மொழிந்த கவிமொழியை இதுவரை கேட்டதில்லை நான். அத்தனை கருத்தியல்களையும் ஆண் பெண் காதலுடன் அகபுறமெங்கும் பரப்பி பாசாங்கற்ற மொழியில் பேசி பேசி பதம்போட்டிப்பது அழகு. உண்மையில் காதலன்றி ஏதுமில்லை. அத்தனையும் அதற்குள்ளே. இரசிக்கவும், காட்சிகளாய் நினைவில் நின்று மகிழவும் உலக வரலாற்றில் நிகழ்ந்து முடிந்த அத்தனை இயற்கை, போராட்டம், வாழ்வியல் என அனைத்தையும் இந்த ஒற்றை உணர்வால் வெல்ல முடியுமென்ற அழுத்தமான உண்மையை உங்கள் கவிமொழி உணர்த்தியது ஆகச்சிறந்த அழகியல். மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்த்துகளும் தோழர். காதலை கவிதையை அதற்கேற்ற சங்க கவிமொழியுடனிருந்து அழைத்து வந்திருப்பது ஆயுள் ஆனந்தக் குறியீடு போல.. தொடரட்டும் கவியும்மொழியும்.. ..