அண்ணன் அறிவுமதி அவர்களிடமிருந்து

மலை..சுதந்திரம்..
புல்லாங்குழல்..மலர்ந்த குழந்தைகள்..
எடையிழந்த பொழுது..தாய்களின்
மார்புகளில்
பாலருந்தும்
குழந்தைகளாய்..பிரபஞ்ச இசையாய்..
சுடுமணலில் வீசப்பட்ட மீன்களாய்..புரட்சிக்
காரர்களின்
தாய்மடியாய்
வனாந்திரங்கள்..தாய்
முலைச் சுனை நீர்..ஏவுகணை..உழைப்பு..
உரிமை…ஒரு
கொரில்லா வீரனைக்
காட்டுமரங்கள்
ஒளித்து வைப்பதாய்..
முத்த ஈரங்களாய்..
 
இவை..
ஜோசப்பின்
கவிதைக்
குறுங் காட்டிற்குள்
பொறுக்கியெடுத்த
சொற்பழங்களல்ல.
வேட்டைச்
சமூக
வாழ்வு தொடங்கி
இன்று வரையிலான
வரலாற்று
வடுக்களின்
கவிதை
இசை
காதல்
அரசியலின்
பெருமூச்சுக் கசிவுகள்!
ஜோசப்பின்
உச்சரிப்பில்
அனலடிப்பு!
தாச்நூரின்
இசையில்
மழைத் தெளிப்பு!
 
காதல் நாளில்
நமக்குக்
கிடைத்த
பயன் செய்
படைப்பு!
 
ஜோசப்பின்
உயரப்பார்வை
எழுது
முயற்சியில்
இதுவும்
மண்மகிழ்வின்
மகிழ்
படைப்பு!
 
வாழ்த்துகள்
அன்பின்
அறிவுமதி
14.02.26

Related Articles

1 comment

மைத்திரிஅன்பு 14/02/2026 - 10:13 PM

கவிதைக்கு கவிதை நெய்த அண்ணனின் வரிகள் அளவைகள். அற்புதம் தோழர். அன்பும் காதலும் சமத்துவமும் வரலாறும் வாழ்வும் என ஒரே நேர்கோட்டில் அழகும் மகிழ்வும்.

Reply

Leave a Comment