ஆவணப்படம் பார்த்தேன்
கண்ணீர் அல்ல
கண்ணீர் அல்ல
கோபம் தான்
கோபம் தான்
வெடித்துக் கொண்டு
வெளிப்பட்டது
அதிகாரத்தின் கரங்களால்
அதிகாரத்திலிருந்த மிருகங்களால்
வேட்டையாடப்பட்ட பெண்களை
நினைத்துப் பார்க்கிறேன்
இதயத்தின் கனம்
இன்னும் கூடுகிறது
குண்டுவீசப்பட்ட இரவைப்போல
அமைதியிழந்து இருக்கிறது
இந்த இரவு
கம்யூனிஸ்ட்களின் தோழமையோடு
அந்த அதிகாரத்தை
நீண்ட நெடுங்காலமாக
எதிர்த்து நின்று
நீதியை வென்றெடுத்த
அந்தப் பெண்களின்
மன வலிமையை
நினைத்துப் பார்க்கிறேன்
நரம்புகளுக்குள் நெருப்பு
வேகமாகப்
பாய்ந்து செல்லத் தொடங்குகிறது
இது தொடக்கம்தான்
இன்னும் அதிகாரம்
அவர்களின் கைகளில்
உழைக்கும் மக்களும்
பழங்குடி மக்களும்
அதிகாரத்தைக் கைப்பற்றாமல்
இதுபோன்ற கொடுமைகளைத்
தடுக்க முடியாது
அதிகாரத்தின் கரங்கள்
அப்படித்தான் நீளும்
நீளட்டுமே
வெட்டி எறிந்தால்
எப்படி நீளும்
தோழர்களே பாருங்கள்
தங்களுக்காக
தொடக்கத்திலிருந்து இறுதிவரையிலும்
உயிரைப் பணயம் வைத்து
உறுதியாக நின்ற
உண்மையான தோழரை
அந்தப் பெண்கள்
வாஞ்சையோடு
அணைத்துக் கொள்வதைப்
பாருங்கள்
அரசியல் என்பது
என்னவென்று புரியும்
இந்த ஆவணப்படத்தை
தவறாமல் பாருங்கள்
அயோக்கியர்கள்
வேறெங்குமில்லை
இங்குதான்
இந்த நிலத்தில்தான்
நிறைந்திருக்கிறார்கள்
காம்ரேட் டாக்கீஸின்
அவசியமான படைப்பு
தோழர்களுக்கு வாழ்த்துகள்!
ஜோசப் ராஜா
