மார்க்ஸ் – நம் மண்ணில்
previous post
உலகம்
நோய்வாய்ப்பட்டிருக்கும்
இந்த நேரத்தில்
உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
என்று
வாஞ்சையோடு அழைத்த
மார்க்சின் குரல்
தேவையாக இருக்கிறது
போர்களால் உலகம் சிதைக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் காலத்தில்
ஆயுதங்களுக்கு அவசியமில்லாத
சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்திய
மார்க்சின் சிந்தனை
தேவையாக இருக்கிறது
இந்த உலகத்தில்
மாபெரும் மாற்றங்களுக்கும்
மகத்தான புரட்சிகளுக்கும்
தொடக்கமாக இருந்த
மாமேதை மார்க்சின்
சிலை
இந்தமண்ணிலும்
மாற்றங்கள் நிகழக்
காரணமாக
அமைய வேண்டும்
என்பதே
விருப்பமாக இருக்கிறது
ஆன போதிலும்
சிலையிலிருந்து
சிந்தனைக்கும்
சிந்தனையிலிருந்து
செயலுக்கும்
செல்வீர்கள் என்றால்
தோழர்களே
உங்களை
இறுக
அணைத்துக் கொள்வேன்!
ஜோசப் ராஜா