சினிமாவும் அரசியலும் – 39

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/reds-movie-analysis-in-tamil-must-watch-films-of-all-time

இந்து தமிழ் திசையின்
இணையப்பக்கத்தில்
சினிமாவும் அரசியலும் தொடர்
தொடங்கக் காரணமாக இருந்தவர்
அண்ணன் செழியன்
உங்கள் எழுத்து
பெரிய பத்திரிக்கைகளில்
வெளிவர வேண்டும் என்று
வலியுறுத்தி
எழுதவைத்து
வெளிவர வைத்தவர்
இதுவரை எழுதியதில்
முக்கியமான சிலபடங்கள்
அவர் பரிந்துரைத்தது தான்
சனிக்கிழமை மாலையில்
கட்டுரை வெளியானதும்
முதலில் அவருக்குத்தான் அனுப்புவேன்
எப்போதும் முதலில்
வாசித்து கருத்துச் சொல்கிறவரும்
அவர்தான்
ஆனால்!
துயரம் தோய்ந்த குரலில்
நேற்றிரவு மனைவி சொன்னார்
”நாளை கட்டுரை வருமே
அண்ணனுக்கு அனுப்ப முடியாதே” என்று
முப்பத்தி ஒன்பதாவதாக வெளிவரும்
வாரன் பீட்டி இயக்கிய
அமெரிக்கப் பத்திரிக்கையாளரான
ஜான் ரீட் பற்றிய
காவியத் திரைப்படமான
Reds திரைப்படம் பற்றிய
கட்டுரையை
வாசிக்க அவர் இல்லை
ஆனாலும் நான் தொடர்ந்து
எழுதத்தான் வேண்டும்
நாங்கள்
திட்டமிட்டிருந்த வேலைகளைச்
செய்து முடிக்கத்தான் வேண்டும்
அதுதான்
அவருக்கு நான் செலுத்தும்
முழுமையான அஞ்சலியாக இருக்கும்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment