வணக்கம் தோழர்களே,
தமிழ் இந்து இணையப் பக்கத்தில்
சினிமாவும் அரசியலும் தொடரை
இப்போதுதான் தொடங்கியது போலிருக்கிறது!
இதோ
இருபத்தி ஐந்தாவது கட்டுரை வெளிவந்துவிட்டது
இன்னும் எழுதவேண்டிய படங்கள்
வரிசையில் காத்திருக்கின்றன
பெரும் உழைப்பைக் கேட்கும் வேலைதான்!
அதிகமான நேரத்தைக் கேட்கும் வேலைதான்!
ஆனால்
எழுதும் வேலையாயிற்றே! எப்படிச் சலிக்கும்!
வாசிக்க நீங்கள் ஆர்வமாக இருக்கும்போது
எப்படி வலிக்கும்!
இதுவரையிலும்
ஆதரவைக் அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கும்
அன்பின் இதயங்களின் கரம்பற்றிக் கொள்கிறேன்
தொடர்ந்து வாசியுங்கள்
தொடர்ந்து பரப்புங்கள்
இந்தத் திரைப்படங்கள் எங்கே யாருக்கோ
எடுக்கப்பட்டவைகள் அல்ல
நன்றாகப் பாருங்கள்
அந்தக் கதாபாத்திரங்களில் நீங்களும் இருப்பீர்கள்
இன்னும் இன்னும் எழுதலாம் பேசலாம்
அன்பும் நன்றியும் அனைவருக்கும்.
ஜோசப் ராஜா
