https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-swimmers-movie-explained-in-tamil-must-watch-movie-list
வணக்கம் தோழர்களே|
தமிழ் இந்து இணையப்பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் 15 ஆவது கட்டுரை வெளிவந்திருக்குறது.
எழுதுவதற்காக ஒரு சினிமாவைப் பார்ப்பதும், அந்த சினிமாவின் கதையை வாசிப்பதும், அந்த சினிமா குறித்தான கட்டுரைகளைத் தேடிப்படிப்பதும் என முற்றிலும் சவாலான வேலையாக இருக்கிறது.
ஆனாலும், இதயத்திற்குப் பிடித்த வேலையென்பதால் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொரு பக்கம் ஒரு மாணவனாக கற்றுக் கொண்டிருப்பது போல உணர்கிறேன்.
நீங்களும் கூடுமான வரையிலும் கட்டுரைகளை வாசிக்கவும், திரைப்படங்களைப் பார்க்கவும், அதுகுறித்து சிந்திக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குத் தெரியும், சினிமாதான் எல்லாமுமாக இருக்கிறது நம்முடைய சமூகத்தில். எத்தனையோ இளைஞர்கள் சினிமாக் கனவுகளோடு மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதை அறிவோம் நாம்.
தோழர்களே, சினிமா சார்ந்த தொழில் நுட்பங்களை நிறுவனங்களின் வழியாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் சமூகப் புரிதல் நீங்கள் கண்டடையக் கூடியது. நிலைப்பாடு நீங்கள் எடுக்கக் கூடியது. அது இருந்தால் மட்டும்தான் நீங்கள் கலைஞனாக நிலைகொள்ள முடியும்.
அந்த வகையில், இந்தத் தொடர் உங்களுக்கு உதவுமென்று நம்புகிறேன். உலக சினிமாக்களில் அரசியல் சார்ந்து எப்படிச் சிந்தித்திருக்கிறார்கள், திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதின் வழியாக,
நீங்கள் ஒரு புதிய பாதையை உருவாக்கலாம். . .
ஜோசப் ராஜா
