வெறுப்பின் காலத்துப் பேரன்பு

ருபோதும்

உங்களால்
நினைத்துப் பார்க்கவே முடியாத
பேரழிவுகளை
வெறுப்பு
நிகழ்த்தி விடுவது போல
ஒருபோதும்
உங்களால்
நினைத்துப் பார்க்கவே முடியாத
பேரதிசயங்களை
அன்பு
நிகழ்த்தி விடக்கூடியது.
 
சில 
நாட்களுக்கு முன்னால்
திருமண நாளன்று
விபத்தில் சிக்கிவிடுகிறாள்
மணப்பெண்
பெரிய விபத்துதான்
மணமகனும்
உற்றார் உறவினர்களும்
மண்டபத்தில் காத்திருக்க
தண்டுவட அறுவை சிகிச்சைக்காக
மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுகிறாள் மணப்பெண்.
 
அடுத்து
இயல்பாக என்ன நடக்குமோ
அது நடக்கவில்லை
அறிந்து கொள்ளுங்கள்
அன்பு
இயல்பான வரையறைகளை
மீறக் கூடியது
ஆம் மீறியது 
அங்கே மானுட அன்பு.
 
மருத்துவமனை நிர்வாகத்திடம்
அனுமதி வாங்கி
குறித்த நேரத்தில்
மருத்துவர்கள் முன்னால்
செவிலியர்கள் முன்னால்
நெருங்கிய உறவினர்களின் முன்னால்
அவசர சிகிச்சைப் பிரிவில்
படுக்கையில் கிடக்கும்
மணப்பெண்ணின் கழுத்தில்
தாலி கட்டுகிறான் மணமகன்.
 
நெகிழ்ந்த இதயங்களில்
கண்களிலிருந்து
துயரமும் மகிழ்ச்சியும்
கண்ணீராய்
வழிந்து கொண்டிருக்கிறது
நானும் கூட
அந்தக் காட்சியைப் பார்த்து
கலங்கித்தான் போனேன்
தோழர்களே
நீங்களும் அழுதுவிடுங்கள்.
 
வாழ்க்கை
வெறுப்பினால் அல்ல
அன்பினால்
அன்பினால் மட்டுமே
அழகாகிறது
அந்த மணமக்களை
வாழ்த்துவோம்!
 
ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 24/11/2025 - 9:57 PM

ஆம் தோழர். துன்பம் பயமும் சோர்வுமெல்லாம் அன்பில் அழியுமடி. அன்பிற்கு அழிவில்லை காண்.

Reply
ஜோசப் ராஜா 05/12/2025 - 12:09 AM

ஆம் தோழர், அன்பிற்கு அழிவேயில்லை!

Reply

Leave a Reply to ஜோசப் ராஜா Cancel Reply