கவனமாக இருங்கள்

டவுளைச் சொல்லி
உங்களைத்
திசை திருப்புகிறார்கள்
கவனமாக இருங்கள்
 
கடவுளைச் சொல்லி
உங்களை
ஏமாற்றுகிறார்கள்
கவனமாக இருங்கள்
 
கடவுளைச் சொல்லி
உங்களுக்குள்
பகையை உருவாக்குகிறார்கள்
கவனமாக இருங்கள்
 
கடவுளைச் சொல்லி
உங்களைச்
சுரண்டுகிறார்கள்
கவனமாக இருங்கள்
 
கடவுளைச் சொல்லி
உங்களை
அதிகாரம் செய்கிறார்கள்
கவனமாக இருங்கள்
 
உங்கள் வாழ்க்கையிலிருந்து
நீங்கள் 
புரிந்து வைத்திருக்கும்
கடவுள் வேறு
உங்களை வஞ்சிக்க
அவர்கள்
கொண்டு வரும் 
கடவுள் வேறு
கவனமாக இருங்கள்
 
எத்தனையோ பேரழிவுகள்
எத்தனையோ கலவரங்கள்
கடவுளின் பேரைச் சொல்லித்தான்
தொடங்கி வைக்கப்பட்டன
கவனமாக இருங்கள்
 
பேரழிவுகளிலும்
கலவரங்களிலும்
ஆதாயமடைந்தது யாரென்று
கண்டுகொள்ளுங்கள்
உங்கள் பிள்ளைகள்
வெறுப்பின் வார்த்தைகளைக்
கேட்க வேண்டாமென்று
நினைத்தீர்களானால்
உங்கள் பிள்ளைகள்
இரத்தச் சகதியைப்
பார்க்க வேண்டாமென்று
நினைத்தீர்களானால்
புற்றீசல் போல
புறப்பட்டு வரும்
வெறுப்பின் உருவங்களை
விரட்ட தயாராகுங்கள்
 
இன்னொரு பக்கம்
நேசிக்கத் தொடங்குங்கள்
சக மனிதனை நேசிப்பதும்
அந்த மானுட விரோதிகளை
எதிர்ப்பதும் வேறுவேறல்ல!
 
ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 04/12/2025 - 9:39 PM

”நேசிக்கத் தொடங்குங்கள்
சக மனிதனை நேசிப்பதும்
அந்த மானுட விரோதிகளை
எதிர்ப்பதும் வேறுவேறல்ல!” – அழுத்தமான வரிகள் தோழர். நேசிப்பின் உண்மை தன்மை தெரியாதவர்களே கடவுளின் பெயரைச் சொன்னால் ஏமாற காத்திருப்பவர்களாக இருப்பார்கள். இன்று ஏமாற்றுபவர்களை முந்திக்கொண்டு ஏமாறும் கூட்டம் இருக்கிறதே. அதற்கு சக மனித நேசிப்பும் முக்கியத்தும் தெரியவில்லை. இந்த புள்ளியை பயன்படுத்தியே எல்லா கலவரங்களையும் எதிரிகள் கட்டமைத்துவிடுகிறார்கள்.

Reply
ஜோசப் ராஜா 05/12/2025 - 12:09 AM

நன்றி தோழர்.

Reply

Leave a Comment