என் பாரதி

முகநூலில்
பத்திரிக்கைகளில்
குழந்தைகளின் உதடுகளில்
காதலர்களின் இதயங்களில்
அரசியல்வாதிகளின்
காரணங்கள் நிறைந்த
வாழ்த்துச் செய்திகளில்
நேற்று நிறைந்திருந்த
என் பாரதியை
இரவெல்லாம்
நினைத்து நினைத்து
இதயம் நெகிழ்ந்தேன்
எனக்கு மட்டுமல்ல
எந்தக் கவிஞனுக்குமே
என்றென்றும்
உத்வேகம் தரக்கூடிய
வார்த்தைகளை
வாரிக் கொடுத்தவர்

இப்போதல்ல
இன்னும்
ஐம்பதோ
நூறோ
வருடங்கள் கழித்து
பாரதியின்
வார்த்தைகளைப் போல
நம்முடைய வார்த்தைகளும்
நினைவு கூறப்படும்
என்று நினைக்கும்போது
அதிகாலையின் பாடலைப்
பாடியபடி
பறவைகள்
பறக்கத் தொடங்கியிருந்தன!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment