உலகைக் காப்பாற்றிய தோழர் ஸ்டாலின்
previous post
லெனின்
இருக்கும்போதே
சொல்லத்தான் செய்தார்கள்
அவர் இறந்த பிறகு
இன்னும் அதிகமாகச் சொன்னார்கள்
சோவியத் யூனியன்
விழுந்துவிடும் என்று
அந்தக் கணக்கைத்
தவறென்று சொல்லி
தலையில் கொட்டினார்
தோழர் ஜோசப் ஸ்டாலின்
சோவியத்தை
மேலும்
மேலும்
மென்மேலும்
வளர்த்துச் சென்றார்
எல்லாத் திசைகளிலும்
எதிர்ப்பு
எதற்கும் அசையவில்லை
சோவியத்தை
அழகாக மாற்றினார்
உலகின் அடிவயிற்றில்
நெருப்பை மூட்டிய ஹிட்லரை
காகிதப் புலிகள்
நெருங்கப்
பயந்து கொண்டிருந்த
நேரத்தில்
செஞ்சேனை வீரர்களை
அனுப்பி
செய்து காட்டியவர்
சர்வாதிகாரியின் கைகளிலிருந்து
உலகதைக் காப்பாற்றியவர்
உலகத் தொழிலாளர்களின்
உன்னதமான தலைவர்
பாட்டாளி வர்க்கத்தின்
நம்பிக்கையான தோழர்
யுத்தங்களால்
உலகம்
இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்
இந்த நேரத்தில்
இரண்டாம்
உலக யுத்தத்தில் இருந்து
இந்த உலகத்தைக் காப்பாற்றிய
தோழர் ஸ்டாலினை
இதயத்தில்
ஏந்திக் கொள்கிறேன்
இந்த நாள்
அவருக்காக
உலகமே அழுத நாள்!
ஜோசப் ராஜா