88000 டன் குண்டுகள்

ஸ்ரேல்

இதுவரையிலும்

பாலஸ்தீனத்தின் மீது

88000 டன்

குண்டுகளை

வீசியிருக்கிறதாம்

விளைவு

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட

மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

லட்சக்கணக்கான மக்கள்

இடம்பெயர்ந்திருக்கிறார்கள்

ஆயிரக்கணக்கான வீடுகள்

தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன

ஆயிரக்கணக்கான ஆலீவ் மரங்கள்

அழிக்கப்பட்டிருக்கின்றன

கொல்லப்பட்டதில்

முக்கால்வாசிக்கும் மேல்

குழந்தைகள்

அகதி முகாம்களிலும்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும்

கொல்லப்படுவதற்காக

காத்திருக்கிறார்கள்

மிச்சமிருக்கும் குழந்தைகள்

இந்தக் கொடூரத்தை

நிகழ்த்திக் கொண்டிருக்கும்

போர்வெறியர்களை

இந்தக் கொடூரத்தை

தொடர்ந்து கொண்டிருக்கும்

பாசிஸ்ட்களை

இந்தக் கொடூரத்தை

இயக்கிக் கொண்டிருக்கும்

முதலாளிகளை

முதலாளித்துவ ஆட்சியாளர்களை

என்ன செய்யலாம் சொல்லுங்கள்

தோழர்களே

இந்த நிலைமைகள்

நீடிக்க கூடாது

அது நல்லதுமல்ல!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment