வழக்கமான
காரணங்களைச் சொல்லி
இஸ்ரேலும்
அமெரிக்காவும்
ஈரானைத்
தாக்கத்
தொடங்கிய போது
வழக்கமாக
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது
உலகம்
ஈரானின் தலைவரைக்
கொலை செய்தார்கள்
காஸாவில் செய்தது போல
ஈரானின்
பள்ளியில் குண்டுபோட்டு
165 குழந்தைகளை
இரக்கமேயில்லாமல்
கொன்று போட்டார்கள்
இதெல்லாம்
அடங்கியது தானே
யுத்தம் என்று
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது
உலகம்
படுகொலைகளைப் பார்க்காமல்
தலையைத்
திருப்பிக் கொண்டிருந்தது
உலகம்
ஆனால்
இப்போது
உலகத்தின் கண்களெல்லாம்
அமெரிக்க இஸ்ரேலின்
கண்காணிப்புக் கருவிகளைப் போல
ஈரானைச் சுற்றியே
வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன
எரிவாயு தட்டுப்பாடு
என்றதும்
விலைவாசி ஏற்றம்
என்றதும்
எங்கோ தொடங்கிய யுத்தம்
இங்கே
ஒவ்வொரு வீட்டின்
வாசல்வரை வந்துவிட்டதை
உணர்ந்து கொள்கிறார்கள் மக்கள்
ஈரானுக்காக
ஏன் பேச வேண்டும்
அமெரிக்கவிற்கு எதிராக
இஸ்ரேலுக்கு எதிராக
ஏன் பேச வேண்டும்
என்றெல்லாம்
இனி கேட்க மாட்டார்கள்
இங்குள்ள சில முட்டாள்கள்
சென்னையில்
ஓட்டுநராக இருக்கும்
நண்பர் சொன்னார்
“யுத்தம் தொடங்கியதிலிருந்து
வேலை இல்லை
கடன் தவணை
மாதச் செலவு
குழந்தைகளுக்கு
வயதான பெற்றோருக்கு”
என்று மனதிற்குள்
சொல்லிப் பார்த்துக் கொண்டே
சட்டென்று விலகிச் சென்றார்
தோழர்களே
யாரையும்
பாதிக்காத யுத்தம்
இனி இல்லவே இல்லை
இப்போது
நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்றுதான்
புலம்புவதற்குப் பதிலாக
இந்த யுத்த வெறியர்களுக்கு
எதிராக
போராடுவதுதான்
இப்படியே
இவர்களை
விட்டால்
பூமி முழுவதையும்
ஏவுகணைத் துளைகளால்
காயப்படுத்தி விடுவார்கள்
உரக்கச் சொல்லுங்கள்
போர் வேண்டாம்
குழந்தைகளைக் கொல்லும்
போர்
வேண்டவே வேண்டாம்
போரை உருவாக்கும்
அமெரிக்கா ஒழிக
போரை உருவாக்கும்
இஸ்ரேல் ஒழிக
ஒழிக ஒழிக
யுத்த வெறியர்கள்
ஒழிக!
ஜோசப் ராஜா
