முக்கியச் செய்திகள்

ழை அறிவிப்புகள்

முக்கியச் செய்திகளாக

மீண்டும் மீண்டும்

ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன

அச்சம் வேண்டாம் என்ற

அரசின் நடவடிக்கைகள்

அதிரும் இசையோடு

அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

மழைக்கான நேரத்தையும்

மழையின் பாதையையும்

காற்றின் வேகத்தையும்

துல்லியமாகக் கணித்து

மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள்

வானிலை வல்லுநர்கள்

மழையைக் கண்டுகொண்ட

மமதையோடு

ஒவ்வொரு மனிதரும்

மழைபெய்யும் நேரத்தை

மழைபெய்யத் தொடங்கிய பிறகும்

தங்கள் கைப்பேசிகளில்

தலைகுனிந்து கவனமாகப்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்

 

ருபக்கம்

மனிதர்களை

மழையிலிருந்து காப்பாற்றவும்

இன்னொருபக்கம்

மனிதர்களை

கொத்துக்கொத்தாகக்

கொன்றுகுவிக்கவும்

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்

தோழர்களே

மழையாகட்டும்

யுத்தமாகட்டும்

நீந்தும் மனிதர்களையும்

மரணிக்கும் மனிதர்களையும்

காப்பாற்றுவதற்கான

சமூக விஞ்ஞானத்தைக்

கண்டுபிடிப்பதுதான்

அந்தச்

சமூக விஞ்ஞானத்தைக்

கண்டுகொள்வதுதான்

இன்றைக்கல்ல

என்றைக்குமே

எல்லோருக்கும்

முக்கியச் செய்தியாக

இருக்கப் போகிறது!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment