மாவோ – நீண்ட பயணத்தின் நாயகர்
previous post
புரட்சியின் குருநாதர்
தோழர் மாவோவை
நினைக்கும் போதெல்லாம்
சீனத்தின் வரலாற்றை
தலைகீழாய்ப் புரட்டிப்போட்ட
நீண்ட பயணத்தின்
நினைத்துப் பார்க்கவே முடியாத
காட்சிகள் தான்
நினைவுக்கு வரும்
95000 வீரர்களோடு
தொடங்கிய பயணம்
368 நாட்கள்
10000 கிலோ மீட்டர்களை
கடந்து
50000 வீரர்களை இழந்து
புரட்சியை சாத்தியமாக்கியது
அடர்ந்த காடுகளையும்
ஆழமான ஆறுகளையும்
உயரமான மலைகளையும்
வலிமையான இதயங்களால்
கடந்தார்கள்
செஞ்சேனை வீரர்கள்
ஏறிக்கடந்த மலைகள் 18
நீந்திக் கடந்த நதிகள் 24
அதனால்தான்
அந்த அற்புதமான
மானுட வரலாற்றின்
மகத்தான
வரலாற்றை எழுதிய
எட்கர் ஸ்நோ
நீண்ட பயணத்தை
இப்படிச் சொன்னான்
“ஒரு தேசமே
இடம் பெயர்ந்தது போன்ற
மகத்தான சாகசம்” என்று
நீண்ட பயணத்தின்
நாயகரை
இப்படியாக
எப்போதும்
நினைத்துக் கொள்வேன்!
ஜோசப் ராஜா