பொங்கலோ பொங்கல்

படம் : கரும்பு அறுவடை

மானுடத் திரளுக்குத் தேவையான

மகத்தான செல்வங்களை

வாரிவழங்கும்

இயற்கையை வணங்குவோம்

பொங்கலோ பொங்கல்

மானுடத் திரளுக்கு அவசியமான

ஒவ்வொன்றையும் உருவாக்கத்

துணைபுரியும்

உழைப்புக் கருவிகளை வணங்குவோம்

பொங்கலோ பொங்கல்

இந்த உலகத்தை

இயக்கிக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு உழைப்பாளியையும்

இறுகப் பற்றிக் கொள்வோம்

பொங்கலோ பொங்கல்

 

ரும்பின் சுவை

நாவில் நர்த்தனம் ஆடுகிறது

புதுப்பானை பொங்கல்

இதயத்தை நிறையச் செய்கிறது

சூரியனின் ஒளி

ஒவ்வொரு முகத்திலும் பிரகாசிக்கிறது

விழாக்கள் தான்

மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது

வேறெதுவும் இல்லை

விழாக்கள் தான்

மனிதர்களை உற்சாகப்படுத்துகிறது

வேறெதுவுமில்லை

வாழ்வெல்லாம் மகிழ்ச்சியும்

நாளெல்லாம் உற்சாகமும்

பொங்கிப் பெருகட்டும்

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment