புரட்சிக்காரனின் மகளே வருக!
previous post
தென் அமெரிக்காவின்
அர்ஜெண்டினாவில் பிறந்து
கியூபாவின் விடுதலைக்காக
பிடல் காஸ்ட்ரோவோடு இணைந்து
வெற்றியடைந்த மறுகணம்
பொலிவியாவின் விடுதலைக்காகப்
போராடப் புறப்பட்ட,
சமூக மாற்றத்தின் மீதும்
புரட்சியின் மீதும்
பெரும் நேசம் கொண்ட
அந்தப் புரட்சிக்காரன்
சே குவேராவின் மகள்
அலெய்டா குவேரா
என் நிலத்தில் நிற்கிறாள் என்பதே
நிறைந்த மகிழ்வளிக்கிறது
உன் முகத்தில்
உன் தந்தையைப் பார்க்கிறேன்
உன் தந்தையின் முகத்தில்
இப்போதும் கூட
முதலாளித்துவத்திற்கு எதிரான
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
சுரண்டலுக்கு எதிரான
கடுங்கோபத்தையும்
புரட்சியின் மீதான
மானுடத்திரளின் மீதான
உண்மையான அன்பையும்
உறுதியான காதலையும்
மட்டுமே பார்க்கிறேன்
வாழ்த்துகள் தோழரே!
ஜோசப் ராஜா
19.01.2023
1 comment
Short and sweet welcome poem…..