நெருடா பிறந்தநாள்
previous post
உலகெங்கும்
பயணம் செய்துவிட்டு
பூமியின் தோல்
எங்கெங்கும்
ஒரேமாதிரி இருக்கிறது
என்று சொன்ன
மகத்தான கவிஞன்
பாப்லோ நெருடாவின்
பிறந்த தினம் இன்று
புரட்சிக்காரர்களை
நேசித்த கவிஞன்
புரட்சிக்காரர்களால்
நேசிக்கப்பட்ட கவிஞன்
நான்
எழுதத் தொடங்கியபோது
தன்னுடைய
காதல் கவிதைகளாலும்
புரட்சிகரக் கவிதைகளாலும்
என்னை முழுவதுமாக
நிறைத்திருந்த
ஏகாதிபத்தியத்தை
எதிர்த்துநின்ற
அந்த மானுடக் கவிஞனை
நெஞ்செல்லாம்
நிறைத்துக் கொள்கிறேன்!
ஜோசப் ராஜா
12.07.2025