இந்த நாள்
உலககெங்கும்
உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும்
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த
ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும்
நம்பிக்கையை நிறைத்த நாள்
நாமும்
நம்முடைய வாழ்க்கையை
நமக்குப் பிடித்தது போல
சுதந்திரமாகவும்
கெளரவமாகவும்
வாழ்ந்துவிடலாம என்ற
விருப்பத்தை விதைத்த நாள்
உலக வரைபடத்தில்
இருள் அகற்றப்பட்டு
விடுதலையின் சிகப்பு நிறம்
பரவத் தொடங்கிய நாள்
காலனி நாடுகளில்
கனன்று கொண்டிருந்த நெருப்பில்
சுதந்திரக் காற்றை வீசி
விடுதலைக் கனவுகளை
வேகமெடுக்கச் செய்த நாள்
சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்த
முதலாளிகளின் வயிற்றில்
நெருப்பை அள்ளிக் கொட்டிய நாள்
உலகத்தின் ஒவ்வொரு கண்களும்
பார்த்துவிடத் துடித்த
பரவசம் நிறைந்த நாள்
நிலங்களையும்
தொழிற்சாலைகளையும்
பொதுவுடமையாக்கி
உழைக்கும் மனிதர்களை
உற்சாகப்படுத்திய நாள்
முதலாளித்துவத்தின்
அளவற்ற ஆசைகளையும்
எல்லையற்ற கனவுகளையும்
சுக்குநூறாகத் தகர்த்தெறிந்த நாள்
ஆம்
நம்பிக்கையின் நாள்
நவம்பர் புரட்சியின் நாள்!
இந்திய கம்பூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மத்திய சென்னை மாவட்டம்
சார்பில்
தோழர் செல்வா தலைமையில்
நடந்த
நவம்பர் புரட்சி தின
கொண்டாட்டத்தில்
மழையோடு மழையாகக்
கலந்து கொண்ட
மகிழ்ச்சியின் தருணம்!
ஜோசப் ராஜா
