நம்பிக்கையின் பெயர் பிடல்

எல்லோரையும் போலத்தான்
பிடலும் பிறந்தார்
எல்லோரையும் போலத்தான்
பிடலும் வளர்ந்தார்
ஆனால்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கொடுங்கரங்களால்
தன்னுடைய கியூபாவும்
லத்தின் அமெரிக்காவின்
ஒட்டுமொத்த நாடுகளும்
கசக்கிப் பிழியப்படுவதை
விரும்பவில்லை அவர்
ஏகாதிபத்தியத்தை
வேரோடும்
வேரடி மண்ணோடும்
வெட்டி வீழ்த்த
புரட்சி செய்தார்
முடியுமா
என்று நினைத்ததை
முடித்துக் காட்டினார்
அதனால்தான்
அதனால்தான்
அவர் பிறந்தநாளை
இந்த உலகம்
இன்றும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
என்றும்
கொண்டாடத்தான் போகிறது
பிடல் என்ற பெயர்
புரட்சியின் பெயர்
பிடல் என்ற பெயர்
ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயர்
பிடல் என்ற பெயர்
நம்பிக்கையின் பெயர்

பிடல் என்ற பெயர்
அன்பின் பெயர்
வாழ்த்துக்கள்
தோழர் பிடல்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment