சொல்லிக் கொள்ளலாம்
கொஞ்சம்
சோகக் கதைகளை
சில நாட்கள்
பசியோடிருக்க நேர்ந்ததை
கையில் பணமில்லாமல்
அனுபவித்த அவமானங்களை
என்றென்றும் வலிக்கும்
ஒரு காதல் தோல்வியை
எதிர்பாராத நேரத்தில்
எதிர்பாராத உறவிடமிருந்து
வெளிப்பட்ட துரோகத்தை
மலைபோல் நம்பிய கைகள்
உதறிவிட்டுப் போனதை
என
சொல்லிக் கொள்ளலாம்
கொஞ்சம்
சோகக் கதைகளை
இதயம் வலிக்கத்
தொடங்கியிருக்குமே
கண்ணீர்
பெருகி வழியத்
தயாராக இருக்குமே
ஆனால்
ஆனால்
சுயநலவாதிகளே
சுயநலவாதிகளே
கேவலம்
சொந்தத் துயரங்களுக்காக
மட்டும்தான்
கண்ணீர் சிந்துவீர்களா
காஸாவிற்காக
ஒரு சொட்டுக்
கண்ணீர் சிந்துங்கள்
காஸாவின்
துயரங்களுக்கு முன்னால்
உங்கள் துயரங்கள்
ஒன்றுமில்லையென்று
உணர்ந்து கொள்ளுங்கள்
குண்டுகளாலும்
பசியாலும்
குழந்தைகள்
செத்துக் கொண்டிருப்பது
உங்கள் இதயத்தை
இன்னும் நொறுக்கவில்லையா
இறுக மூடியிருக்கும்
உதடுகளைத் திறந்து
ஒருதரம் காஸா என்று
உரக்கச் சொல்லுங்கள்
பேரழிவை எதிர்கொண்டிருக்கும்
அவர்களும் கூட
இந்த உலகத்தின்
அதிபரையோ
பிரதமரையோ
ஏன்
எவனையும் நம்பவில்லை
உங்களைத்தான்
உங்களைத்தான்
நம்பியிருக்கிறார்கள்
காஸா உயிர்த்தெழட்டும்!
காஸா உயிர்த்தெழட்டும்
previous post
