காதலின் நிழலில் இருபது வருடங்கள்

தேவதைகள்

வெள்ளை உடைதரித்து

மேகங்களுக்குள் இருந்து வெளிப்படுவார்கள்

என்றுதான் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது

அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டிருந்தேன்

ஆனால்

கருப்பு உடைதரித்து

அந்த மலைச்சிகரத்தில்

அந்த அதிகாலையின்

அகலாத பனிமூட்டத்திற்குள்ளிருந்து

அதுவரையிலும் எனக்குக் காட்டப்பட்ட

அதுவரையிலும் என்னிடம் சொல்லப்பட்ட

அத்தனை தேவதைகளைக் காட்டிலும்

பேரழகாய் வெளிப்பட்டாய் நீ! 󠅲

󠅲

றண்ட பூமியிலிருந்து வந்திருந்த எனக்கு

வற்றாத காதலை வாரிக்கொடுத்தாய்

இயற்கையின் அழகையும்

வாழ்க்கையின் அழகையும்

ஒரேநேரத்தில் பார்க்கச்செய்தாய்

புல்வெளிகளில் நடந்து திரிந்தோம்

மேகமூட்டங்களுக்குள் நுழைந்து வெளியேறினோம்

காலநேர கணக்கில்லாமல் காதல் பேசினோம்

ஆனால் அந்த நான்கு வருடங்கள்

என்னைச் சேர்வதற்காய்

எதற்காக அவ்வளவு துயரங்களை அனுபவித்தாய்

என்று நினைத்துப் பார்க்கும்போது

கண்களும் இதயமும் கசிந்துருகுகிறது

காதலுக்காக இரண்டு இதயங்கள்

இவ்வளவு துயரங்களைக் கடக்க வேண்டுமா

என்ற கேள்விகள்

இப்போதும் எனக்குள் ஒலிக்கத்தான் செய்கிறது

இதோ

நீயும் நானும் நம்முடைய காதலும்

நிலத்தில் நங்கூரத்தைப் போல!

󠅲

ண்ணிப்பார்த்தால்

இருபது வருடங்கள் கடந்திருக்கிறது

உன் காதலின் நிழலில்

இளைப்பாறத் தொடங்கி

காதலில் மட்டும்தான்

காலம் சக்கரம் கட்டிக்கொண்டு

பறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறேன்

இந்த நீண்ட பயணத்தில்

ஒவ்வொரு காலையிலும் புதுச்சூரியனைக் கொடுத்ததற்காக

ஒவ்வொரு மாலையிலும் புதுநிலவைக் கொடுத்ததற்காக

ஒவ்வொரு வேளையிலும் புத்தொளியைப் பாய்ச்சியதற்காக

உனக்கும் உன் காதலுக்கும்

நன்றிக்குரியவனாக இருப்பேன் எப்போதும்!

󠅲

ன் காதலின் வழியேதான்

இந்தச் சமூகத்தின் மேடுபள்ளங்களைத்

தெரிந்து கொண்டேன்

உன் காதலின் வழியேதான்

இந்தச் சமூகத்தின்

அகஅழுக்குகளை அறிந்துகொண்டேன்

உன் காதலின் வழியேதான்

இந்தச் சமூகத்தின்

மொத்த இழிவுகளையும் புரிந்துகொண்டேன்

உன் காதலின் வழியேதான்

ஒவ்வொரு இதயத்தையும்

உள்ளும் புறமும் உணர்ந்துகொண்டேன்

இந்த வாழ்க்கை

இவ்வளவு போராட்டம் நிறைந்ததாக

இல்லாமல் இருந்திருக்கலாம்

ஆனாலும் என்ன

இந்தக் காதல்

இவ்வளவு வலிமையானவர்களாக

நம்மை மாற்றியிருக்கிறதே

அது போதாதா என்ன!

󠅲

த்தனையோ அம்புகள் வீசப்பட்டன

என்னை நோக்கி

வீழ்ந்துவிடவில்லை நான்

எத்தனையோ புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன்

ஒவ்வொரு நாளும்

தளர்ந்துவிடவில்லை நான்

எத்தனையோ காயங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன்

நீண்ட காலங்களாக

கலங்கிவிடவில்லை நான்

எத்தனையோ துரோகங்களை எதிர் கொண்டிருக்கிறேன்

மீண்டும் மீண்டும்

துவண்டு போகவில்லை நான்

வெற்றியையும் தோல்வியையும்

ஒவ்வொருமுறையும் உன்னிடம்தான் கொண்டுவந்தேன்

கண்களின் வழியாக

இதயத்தைப் பார்க்கத் தெரிந்தவள் நீ

அமைதி நிறைந்திருக்கும் முகத்தில்

மனதின் சஞ்சலங்களை வாசிக்கக் கூடியவள் நீ

ஒன்றுமில்லை என்ற வார்த்தைக்குள்

ஓராயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கக் கூடியவள் நீ

உன்னைச் சரணடைவதில் ஒளிந்திருக்கும் சக்தியை

உணர்ந்து கொண்டதே போதுமென நினைக்கிறேன்!

󠅲

ன்னுடைய பலவீனங்களை உணர்ந்தவள் நீ

என்னுடைய பலம் எதுவெனப் புரிந்தவள் நீ

கவிதையைத் தவிர

எனக்கெதுவும் தெரியாதென்பதைத்

தெரிந்து கொண்டவளும் நீதான்

எப்படித் தொடர்ந்து சிந்திக்கிறாய்

என்ற கேள்விகளுக்கு

என்னுடைய இயக்குவிசையான உன்னைச்

சொல்லாமல் இருந்ததில்லை ஒருபோதும்

நம் மகள்களைப் போலவே

என் வார்த்தைகளும் சிந்தனையும்

வளர்ந்து கொண்டிருப்பதற்குப் பின்னால்

நீதான் நீதான் நீயேதான் இருக்கிறாய்

அதற்காகவே அன்பே

உனக்கும் உன் காதலுக்கும்

நன்றிக்குரியவனாக இருப்பேன் எப்போதும்!

󠅲

ள்ளக்குறையாத காதலோடு

அலையாய்ப் பொங்கும் காதலோடு

சொல்லித் தீராத காதலோடு

சொல்லத் துடிக்கும் காதலோடு

இன்னும் இனிக்கும் காதலோடு

இன்றும் பிறக்கும் காதலோடு

இருபது வருடங்களைக் கடந்தவர்கள் என்ற

பெருமிதத்திலும் பெருமகிழ்ச்சியிலும்

இந்த உலகத்தை ஆசீர்வதிப்போம்

காதலின் கரங்களால்

ஆசீர்வதிக்கப்பட்ட இந்த உலகத்தில்

போர்களையும் கலவரங்களையும் பரப்பிவிட்டு

இலாபத்தை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கும்

முதலாளித்துவம் ஒழிந்து

வர்க்கபேதமில்லாத வளமான பூமியில்

வாழ்வைக் கொண்டாடட்டும் மனிதர்கள்! 

வாழ்வைக் கொண்டாடட்டும் மனிதர்கள்!

󠅲

Related Articles

2 comments

Baskaran F T 17/05/2023 - 10:45 AM

காதலை அழகாக இன்னும் அழகாக
காட்சி படுத்தி உள்ளீர்….
நீர் கவிஞன் என்பதால் இந்தக் காலத்தில் நிகழ்வுகளோடு உங்கள் காதலையும் விவரித்துள்ளீர்கள்…..
காதலின் வலிகள் என்ன
காதலின் வசந்தங்கள் என்ன என்பது
உங்களின் காதலின் அனுபவங்களின் வெளிப்பாடு….

அருமை அருமை கவிஞரே….

மண நாள் வாழ்த்துக்கள்…..

Reply
பெரணமல்லூர் சேகரன் 17/05/2023 - 4:06 PM

அற்புதமான காதல் கவிதை

மனதின் ஆழத்தில் வேரூன்றிய காதல் நீண்ட காலமாக உயிர்ப்புடனும் உன்னதத்துடனும் ஜீவித்திருப்பதை கவிதையின் வழி உணரலாம்.

காதல் கவிதையே ஆயினும் முடிவில் தாம் விரும்பும் பொதுவுடைமை சமுதாயத்தைக் குறிப்பிட்டு எழுதியது கவிஞர் ஜோசப் ராஜா அவர்களுக்கே உள்ள சிறப்பு.

காரணம் அவரது காதல் வர்க்க பேதமற்ற சமூகத்தின் மீதும் தான்.

வாசியுங்கள்
வசப்படுவீர்கள்.

Reply

Leave a Comment