கடவுளின் பெயரால்

படம் : தன்னைக் கடவுளாகவே சொல்லிக்கொண்ட ஜார் மன்னனின் சிலையை உடைத்தெறிந்தார்கள் புரட்சிசெய்த பொதுமக்கள் (1917)

ம்புங்கள்

கடவுளின் பெயரால்

இந்தத் தேசத்தில்

பாலும் தேனும்

பாய்ந்தோடப் போகிறது

 

ம்புங்கள்

கடவுளின் பெயரால்

இந்தத் தேசத்தின்

அரசியல்வாதிகள்

உண்மையை மட்டுமே

பேசப் போகிறார்கள்

 

ம்புங்கள்

இந்தத் தேசத்தின்

கடவுளோடு கூடவே

நிலைத்திருக்கும்

சாதியப் பாகுபாடுகள்

சுத்தமாக

இல்லாமல் ஆகப்போகிறது

இந்தத் தேசத்தில்

வளர்ந்து கொண்டிருக்கும்

மதவெறியர்கள்

வெறுப்பைப் புறந்தள்ளிவிட்டு

அன்பின் பாதையில்

பயணிக்கப் போகிறார்கள்

கடவுளின் பெயரால்

சக மனிதனைத்

துன்புறுத்துவதும்

கடவுளின் பெயரால்

சக மனிதனைத்

துடிதுடிக்க கொல்வதும்

நிகழாமல் இருக்கப் போகிறது

 

ந்தத் தேசத்தின் வளங்களை

ஓயாமல் சுரண்டிக் கொழுத்த

ஒவ்வொரு முதலாளிகளும்

தாங்கள் அபகரித்த

ஒட்டுமொத்த செல்வத்தில்

கொஞ்சத்தைக்

கடவுளுக்கல்ல

ஒட்டுமொத்த செல்வங்களையும்

கடவுளின் பெயரால்

மக்களுக்கே

திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்

கடவுளின் பெயரால்

முதலாளிகளின்

நலன்களுக்காக அல்லாமல்

மக்களின் நலன்களுக்காக

ஒவ்வொரு அரசியல்வாதிகளும்

வியர்வை சிந்தச்சிந்தப்

பாடுபடப் போகிறார்கள்

 

ந்தத் தேசத்தின் குழந்தைகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும்

இந்தத் தேசத்தின் பெண்கள்

கற்பழிக்கப்படுவதும்

இனிமேல் கடவுளின் பெயரால்

நிகழவே நிகழாமல் ஆகப்போகிறது

டவுளின் பெயரால்

இந்தத் தேசத்தின்

ஒவ்வொரு குடிமகனும்

நிம்மதியாகவும்

மகிழ்ச்சியாகவும்

பட்டாம்பூச்சிகளைப் போல

பறவைகளைப் போல

சிறகடிக்கப் போகிறார்கள்

 

ம்புங்கள்

கடவுளின் பெயரால்

இந்தத் தேசத்தில்

பாலும் தேனும்

பாய்ந்தோடப் போகிறது

ஒருவேளை இல்லையென்றால்

கொஞ்சகாலம் காத்திருங்கள்

காத்திருந்தும்

காத்திருந்தும்

எதுவுமே நடக்கவில்லையென்றால்

புரட்சி செய்யுங்கள்

எல்லாமும் நடக்கும்

உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை

சிந்திக்கச் சொல்கிறேன்

கொஞ்சம் கடினமானதுதான்

என்னசெய்ய

வாழ வேண்டுமே!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 26/01/2024 - 1:32 PM

கடவுளின் பெயரால் நிகழ்ந்து வரும் அநீதிகளைத் தமது கவிதையில் விவரிக்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

அநீதி கண்டு அமைதி காக்கும் போக்கு ஆபத்தானது. எதிர்த்து நின்றுப் போரிடுவது இன்றைய தேவை.

சொல்லாலும் செயலாலும் அவரவர் வாய்ப்புப்படி இயங்க வேண்டியது காலத்தின் அவசியம்.

Reply
Joe 30/01/2024 - 8:13 AM

வாழ்த்துக்கள் ஜோசப் ரொம்ப சிறப்பா எழுதுகிறீர்கள்

Reply

Leave a Comment