எதுவும் மிஞ்சாது
previous post
ஜனாதிபதியோ
அதிபரோ
பிரதமரோ
முதலமைச்சரோ
இல்லை
இவர்களுக்குப் பின்னால்
ஜனநாயகப் போர்வையை
வசதியாகப் போர்த்திக்கொண்டு
நாட்டின் வளங்களை
வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும்
முதலாளிகளோ
அல்ல
அல்லவே அல்ல
மக்கள் தான்
ஆண்டாண்டு காலங்களாக
அழுத்தப்பட்ட மக்கள்தான்
காலங்கலமாக
கசக்கிப் பிழியப்பட்ட
மக்கள்தான்
வீடில்லாத மக்கள்தான்
உணவில்லாத மக்கள்தான்
வேலையில்லாத மக்கள்தான்
நிம்மதி இல்லாத மக்கள்தான்
வரலாற்றை
மாற்றி எழுதுவார்கள்
தேசத்தை
தலைகீழாய்ப்
புரட்டிப் போடுவார்கள்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தக் கோபத்திற்கு முன்னால்
மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தப் பேரலைக்கு முன்னால்
அடங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியில்லை
அதிகாரம்
அந்தப் பெரு நெருப்பிற்கு முன்னால்
பொசுங்கித்தான் ஆகவேண்டும்
திருடர்களே
பொய்யர்களே
திமிர் பிடித்தவர்களே
உங்கள் ஆணவத்தை
அந்த நெருப்பு
நெருங்கி வரும்
எதுவும்
எதுவும்
எதுவும்
மிஞ்சாது
என்பதை மட்டும்
சொல்லிக் கொள்கிறேன்!
ஜோசப் ராஜா