உஸ்தாத் சாஹிர் ஹுசைன்
previous post
காலமெல்லாம்
இறுக அணைத்திருந்த
காதலனைப் பிரிந்திருக்கும்
அந்தத் தபேலாவை
நினைத்துப் பார்க்கிறேன்
அந்தக் கலைஞனின்
அற்புத விரல்கள்
ஓயாமல் ஆடிய
அழகிய நடனத்தால்
அந்தத் தபேலாவிலிருந்து
உருகி வழிந்த
உன்னதமான இசையை
மீண்டும் பருகுகிறேன்
இசையோடிருக்கும்
அந்தப் புன்னகையும்
காற்றில் நடனமாடும்
அந்தத் தலைமுடியும்
அழகிய காட்சிகளாகப்
பதிந்திருக்கின்றன கண்களில்
காற்றில்
நிறைந்திருக்கும் இசையால்
மானுட இதயங்களில்
பற்றிப் படர்ந்திருக்கும்
இசையால்
உஸ்தாத் ஜாஹிர் உசைன்
என்றென்றும்
வாழ்வாரென்றே
நம்புகிறேன்!