உலக சினிமா புத்தகம்
previous post
உலகத்தின்
அற்புதமான கதைகளை
உலகத்தின்
உன்னதமான காட்சிகளைத்
தமிழ் இதயங்களிலும்
தமிழ்க் காதுகளிலும்
கொட்டிய புத்தகம்
உலக சினிமா என்ற
இந்தப் புத்தகம்
சினிமாவைப் பற்றிய
புரிதலையும்
சினிமா
எடுத்துவிடலாம் என்ற
நம்பிக்கையையும்
கொடுத்திருக்கிறது என்று
எத்தனையோ பேர்
சொல்லக் கேட்டிருக்கிறேன்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இதோ
மக்கள் பதிப்பாக வெளியிடப்பட்டு
அப்படிப்பட்ட நம்பிக்கையும்
அப்படிப்பட்ட உத்வேகமும்
இன்னும்
இன்னும்
அதிகமாகும் என்று
நம்புகிறேன்
ஒளி இயக்குநர்
அண்ணன் செழியனின்
கடின உழைப்பு
கண்டிப்பாக பலன்தரும்
விதைகள் விருட்சமாகும்
நம்புங்கள்
சினிமா மக்களுக்கானது
நம்புங்கள்
சினிமா எளிமையானது
நம்புங்கள்
அதைத்தான்
அழுத்திச் சொல்கிறது
உலக சினிமா புத்தகம்!