விமர்சனம் – தோழர். தக்கலை ஹமீம் முஸ்தபா

“எழுத மாட்டேன் /ஒரு வரிகூட/ நீ/ஒப்பும்படி” என்னும் புகழ்பெற்ற வரியொன்று பாவலர் இன்குலாப் அவர் களிடம் உண்டு.

சமகாலக் கவிதைகளில் ஒப்புதல் என்னும் கேள்விக்கு இடமே இல்லை. எல்லா கவிதைகளும் விதை நீக்கம் செய்யப்பட்ட செடிகளாகவும், மரங் களாகவும், காய்களாகவும்,கனி களாக வும்  இருகின்றன.

சமகாலக் கவிதைகளில் அரசியல் பேசப்படுவதில்லை பேசப்படும் அரசியலும் மனுஷ்யபுத்திரன் பாணி யிலான அரசியல் கவிதைகளாக இருக்கின்றன.

முன்னெப்போதையும்விட கனத்தப் போராட்ட வாழ்க்கை ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும் சூழலில் மக்களும் நாமும் வாழ்கிறோம். வட்டார அளவில், நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில், நாடுதழுவிய அளவில் ,உலக அளவில் மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

முன்னெப்போதையும் விட நெருக்கடி யின் எல்லா கொடுக்குகளும் நம்மைத் தீண்டிக்கொண்டிருக்கும் நிலையில், போராட்டங் களின் நடுவில் போராட்டங் களின் நுண்ணிடுகளுக்குள் மாட்டிக் கொண்டு  வெளியேற முடியாத நிலை யில் நிலம் மாறி இருக்கும் நிலையில் எழுதப்படும் கவிதைகள் அவற்றைக் கடந்தும் செல்லும் எதனால் ஏற்பட்டது என்பது விவாதத்திற்குரியது.

படைப்பாளியின் சமூக அக்கறை என்று பேசப்பட்டு வந்த பொருண்மை இங்கு காலவதியாகிவிட்டதா என்பது தெரிய வில்லை. எழுபதுகள் எண்பதுகளில் தமிழ்ப் படைப்புச்சூழல் இருந்த நிலை யிலிருந்து முற்றிலும் மாறி இருக்கிறது இன்றையச் சூழல் குறிப்பாகக் கவிதை யில்.

கவிதையை ஓர் ஆயுதமாகக் கொண்டு உருவான வானம்பாடி இயக்கம் அதன் கவிஞர்கள் கவிதைகளின் பாடு பொரு ளில் சமூகத்தை வைத்தார்கள் .

 தணிகைச்செல்வன் இத்தகைய முயற்சிகளின் முன்னோடியாக இருந் தார். தொடர்ந்து இன்குலாப், மேத்தா , அக்னிபுத் திரன், புவியரசு, மீரா, சிற்பி, அப்துல்ரகுமான் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

இதற்கு இணையான கலை இலக்கியப் பெருமன்றம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் போன்ற இடதுசாரி அமைப்புகளின் கவிஞர் களும் வலுவான கவிஞர்களாக உருவா னார்கள். ஹெச்.ஜி.ரசூல் கந்தர்வன் போன்றவர்கள் இந்தப் பின்புலத்தில் உருவா னார்கள்

வானம்பாடி இயக்கத்தின் வீழ்ச்சி, இடது சாரி இலக் கியங்களில் ஏற்பட்ட பின்ன டைவு நடந்தேறிய காலகட்டத்தில் தலித் இலக்கியம் , பெண்ணிய இலக் கியம் என்று கவிதை வேறொரு வடிவம் எடுத் தது. என்.டி.ராஜ்குமார், நட.சிவ குமார், சுகிர்தராணி, லீனா மணிமேகலை வெண்ணிலா, தி.பரமேசுவரி என்று அடுத்தத்தலைமுறை உருவானது . கழிந்த பத்துப் பதினைந்து ஆண்டு களில் அவையும் தேக்கநிலை கண்டு விட்டன.

கவிதைகளில் சமகாலத்தைப் பதிவு செய்தல் அருகி விட்டது. இத்தகையச் சூழலில்தான் கவிஞர் ஜோசப் ராஜவின் கவிதைத் தொகுப்புகள் கவனம் பெறு கின்றன. கவிதையில் நடப்பியலைப் பதிவு செய்தல் என்பதோடு மட்டும் நில்லாமல் குறிப்பிட்டதொரு பொருண் மைக்கு ஒரு தொகுப்பு என்னும் நிலை யை நோக்கி அவர் நகர்ந்திருக்கிறார்.

கொரோனாவை காரணப்படுத்தி உள் நாடு தொடங்கி உலகநாடுகள் வரை மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு குறித்த கவிதைகளை ‘ஊரடங்கின் உளவியல்’ என்னும் பெயரிலும், இந்தியாவை உலுக்கிய விவசாயிகளின் போராட்டம் குறித்தக் கவிதைகளை  ‘முற்றுகை’ என்னும்  பெயரிலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத் தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை குறித்த கவிதைகளை ‘காத்தி ருக்கும் சாவிகள்’ என்னும் பெயரிலும் தொகுப்பாக்கி இருக்கிறார்.மூன்றும் தமிழ் அலை வெளியீடாக வந்துள்ளன .

ஊரடங்கு காலத்தின் பல்வேறு சித்திரங் கள், விவசாயப் போராட்டத்தின் பல் வேறு கூறுகள் அதன் சிக்கல்கள் அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள்  பாலஸ்தீன் அழிப்புப் போரின் பல்வேறு நிலைகள் என்று தொகுப்புகள் அமைக் கப்பட்டுள்ளன.

போராட்டம்  குறித்து எழுதுவது என்பது ஜோசப் ராஜாவைப் பொறுத்து போராடு வதற்கு சமமானது. இன்றுள்ள சூழலில்  கவிதைக்கு ஏற்பட்டிருகிற  மதிப்பிறக்க மும்,கவிதை வாசிப்பில் ஏற்பட்டிருக்கும் ஆர்வக்குறைவும் கவிஞருக்குத் தெரிந் தே இருக்கிறது.

ஆனாலும் மக்களை , அவர்களின் போராட்டங்களைக் குறித்து எழுதுவதை தன்னுடைய தார்மீகக் கடமையாகக் கருதுகிறார். அவரைப் பொறுத்தவரை ஏன் போராடு கிறாய்? என்று கேட்பதும் ஏன் எழுதுகிறாய் என்று கேட்பதும் வேறுவேறு குரல்கள் அல்ல. இரண்டும் ஒரே குரல்.

ஜோசப் ராஜவை பொறுத்தவரை உண்மையும் கவிதையும் வேறு வேறல்ல. கவிதைகளை கைப்பற்றிக் கொள்வது என்பது உண்மையைக் கைப்பற்றிக்கொள்வது. கவிதை உண்மையாக இருக்க வேண்டும் என்றால் அது மக்களைப் பாடவேண்டும், மக்களின் வலியைப் பாடவேண்டும். என்றாகிலும் வெற்றிபெறுவோம் என்னும் மக்களின் நம்பிக்கையைப் பாடவேண்டும் . கவிதை உண்மையாக இருக்க வேண்டும். உண்மை என்பது மக்களின் உண்மை , மக்களுக்கான உண்மை .

“ இது தீர்க்கதரிசனமல்ல/ நான் தீர்க்கதரிசியுமல்ல/ காலங்களைக்/ காலங்களிலிருந்தே கற்றுக் கொள் கிறேன்/ கவிதைகளைக்/ காயங்களி லிருந்தேகட்டியெழுப்புகிறேன்”

 (ஊரடங்கின் உளவியல், ப.  42) என்கிறார்.

கருத்தியல் நிலையில் மார்க்சியத்தை தன்னுடைய சித்தாந்தமாக வரித்துக் கொண்டிருக்கிறார். அதன் ஊடாகவே பிரச்சனைகளை, போராட் டங்களை அணுகி கவிதைப்படுத்துகிறார். விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம் எப்படி எல்லா எல்லைகளையும் கடந்து வர்க்கமாக அணிதிரளவைத்தது என்பதை பாடும்போது,

“குருத்வாராக்களின் அடுப்புகள்/ அணையாமல் எரிந்து கொண்டிருக் கின்றன/ கோவில்களின் அடுப்புகள் / மீண்டும் மீண்டும் மூட்டப்படுகின்றன/ மசூதி களிலி ருந்து/ மானுட அன்பு / மழையைப் போப்/ பொழிந்து கொண் டிருக்கிறது/ எந்தப் பேதமுமில்லாமல்/ எல்லாக் கடவுள்களும் / கோட்டையை நோக்கி / முற்றுகைக்குச் சென்று கொண்டிருக்கும் / ஒவ்வொரு கால் களுக்கும்/ வலுசேர்த்துக் கொண் டிருக்கிறார்கள்”

(முற்றுகை, ப.31) 

என்கிறார். இங்கே வர்க்கமாக திரள் கையில் மதங்களும் அதற்கு வலுசேர்க் கின்றன என்கிறார்.  

மார்க்சிய நிலைப்பட்ட அவரின் இந்த எழுத்துமுறை பிரச் சனையின் அடி வேரைக் கண்டுகொள்ள உதவுகிறது என்றபோதும் கவிதையாக்கத்தில் சில போதாமைகளை அது ஏற்படுத்தியும் இருக்கிறது . கவிதைகள் அதன் கவிதைத் தன்மைகளிலிருந்து விலகிடும் ஆபத்தை இது ஏற்படுத்தி விடுகிறது.இதனையும் ஜோசப் ராஜா கவனத் தில் கொள்ளவேண்டும்.

நெடுங்கவிதைகளுக்கு  இன்றுள்ள கவிதைச்சூழல் வாய்ப்புத் தரவில்லை என்றாலும் தைரியமாக அதனைக் கையாண்டுள்ளார் ஜோசப். கவிதை குறுங்கவிதையா நெடுங்கவிதையா என்பதினும் முக்கியம் சொற்சிக்கனம். இன்னும் கொஞ்சம் உழைப்பை செலுத்தி இருந்தால் இதனைத் தவிர்த்து இருக்கலாம் . சற்று அதிலும் ஜோசப் கவனம் செலுத்த வேண்டும்.

யுத்தம்  ,கலவரம் எல்லாம் எங்கெங்கோ நடப்பதாக கருதிக்கொண்டிருக் கிறோம். உண்மையில் நம் வீட்டுக் காட்சிப் பெட்டிகளின் வழியாக இவை நம் வீடுகளுக்குள் வந்துவிட்டன. கையி லிருக்கும் அலைபேசி வழியாக நமக்கு மிக அருகில் வந்துவிட்டன . நாம் பார்க் கிறோம் . பெண்கள் பார்க்கிறார்கள் குழந்தைகள் பார்க்கிறார்கள் . ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு புரிதல் ஒவ்வொரு கேள்விகள் .

கவிதை சொல்லியும் அவரின் சிறுவயது மகளும் தொலைக்காட்சி பார்க்கிறார் கள் .பாலஸ்தீன் மீதான யுத்தம் காட்சிப் படுகிறது .இப்போது அந்தக் குழந்தை கேட்கிறது கவிதை சொல்லியிடம்

“ “அப்பா என்ன இது” என்கிறாள்.

“யுத்தமப்பா” என்கிறேன் தாழ்ந்த குரலில்

“யாருக்கும் யாருக்கும்” என்கிறாள்

“அது  இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும்”

“சரியா சொல்லுங்கப்பா”

“ஆமாம்ப்பா அவங்களுக்குத்தான்”

“அப்ப இந்தக் குழந்தைங்க

ஏம்ப்பா செத்துக்கிடக்காங்க” “

 (காத்திருக்கும் சாவிகள், பக்.29-30)

இன்குலாப் அவர்கள் கவிதை யொன் றில் “எழுதிய தெல்லாம் மொழி பெயர்ப்புத்தான்”  என்று குறிப்பிடுவார். இளைஞர்களின் விழிகளில் எரிகிற சுடர்களையும் , போராடும் மக்களின் நெற்றிச்சுழிப்புகளையும் இதுவரை கவிதையென மொழிபெயர்த் திருக்கிறேன் என்பது இன்குலாப் கவிதையின் சாரம்.

ஜோசப் ராஜாவும் அதனையே செய்திருக்கிறார் .முன்னோர் ஆங் காங்கே மொழி பெயர்த்தக் குறிப்பு களை ஜோசப் ராஜா முழுமை யாகத் தர முயன்றிருக்கிறார்.

கவிஞருக்கு வாழ்த்தும் அன்பும்.

Related Articles

Leave a Comment