மொஸார்ட்டின் துயர இசை

ழுதிக் கொண்டிருக்கும் 

சினிமாவும் அரசியலும் தொடருக்காக

அடுத்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

மானுட வலியை மானுட துயரத்தைக் கடத்துவதற்கு

மொஸார்ட்டின் இசையைப் பயன்படுத்தியிருந்தார் இயக்குனர்

இரண்டு நாட்களாக அந்த இசையோடு இருந்து கொண்டிருக்கிறேன்

Requiem என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இசைத்தொகுப்புதான்

மொஸார்ட்டின் இறுதியான படைப்பு

கத்தோலிக்க மரபில் Requiem Mass என்பது

இறந்தவர்களுக்காக நடத்தப்படும் திருப்பலி

நான் பார்த்த திரைப்படத்தில் 

இந்த இசைத்தொகுப்பில் இருந்து

Lacrimosa என்ற பகுதியை பயன்படுத்தியிருந்தார் இயக்குநர்

Lacrimosa என்ற லத்தீன் சொல்லுக்கு கண்ணீரின் நாள் என்று பொருள் கொள்ளலாம்

இறந்தவர்களுக்காக நடத்தப்படும் பிரார்த்தனையில் இசைக்கக்கூடியதென்றாலும்

எல்லோரும் ஒருமுறை கேட்டுவிடக்கூடிய இசைத்தொகுப்பு

இசைக்குப் பின்னால் இருந்து என் தந்தை எழுந்து வந்தார்

இந்த இசைக்கு இதயத்தின் அழுக்குகளை கழுவிச் சுத்தப்படுத்தி

வெளியேற்றக்கூடிய சாத்தியமும் இருக்கத்தான் செய்கிறது

இதோ பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இசை

யுத்தம் என்ற பெயரில் 

கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்

குழந்தைகளின் அலறல்கள்

வயலின்களுக்கு நடுவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது

சிம்பொனியை இசைக்கும் அதிகமான வாத்தியங்களுக்கு நடுவிலிருந்து

அந்தக் குழந்தைகளின் அலறல்களுக்கும் கேட்கிறது எனக்கு

மொஸார்ட், இந்த இரவும் உன்னோடுதான்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment