தோழர். நல்லகண்ணு

எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே என்மீதும் என் கவிதைகளின் மீதும் மாறாத அன்பும் குறையாத மதிப்பும் வைத்திருப்பவர். தவாரிஷ் லெனின் கவிதைத் தொகுப்பை அவரளவிற்கு கொண்டாடியவர் யாரும் இல்லையென்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அந்தப் புத்தகத்திற்கு அற்புதமான முன்னுரை எழுதிக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்த்தார்.

அந்த வகையில் கவிதையின் மதிப்பை அறிந்தவர் தோழர். கவிதையின் தேவையை மிகச்சரியாக உணர்ந்தவர் தோழர். ஒவ்வொரு படைப்பும் வெளிவந்தவுடன் அவரைச் சந்திப்பது வழக்கம். அப்படியே இன்று காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தை வழங்குவதற்காக நானும் தோழர் இசாக் அவர்களும் சென்றிருந்தோம். இனிய சந்திப்பு.

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 06/03/2024 - 2:44 PM

சிறப்பு தோழர். சரியான நியாமான தலைமை. அவருக்கு உங்கள் நூல் பிரதியை வழங்கியதில் பெரு மகிழ்ச்சி. ஐயாவின் நலம் என்றும் போற்றுதற்கு உரிய ஒன்று.

Reply
Baskaran F T 07/03/2024 - 7:18 AM

தோழரே நல்லகண்ணு ஐய்யாவை சந்தித்தது பல கடவுள்களின் ஆசி உங்களுக்கு கிடைத்ததாக நான் பெருமை கொள்கிறேன்….

Reply

Leave a Comment