இயக்குநர் விடிவெள்ளி அவர்களிடமிருந்து

ஒளி என்று ஒன்று இருந்தால் அது கட்டாயம் நம்மை வந்து சேரும், அப்படி மூடி இருந்த என் கண்களையும் தாண்டி என்மீது விழுந்த  ஒரு மாபெரும் வெளிச்சம் ஜோசப் தோழர்.

ஜோசப்பிடம் அவ்வளவு சுலபமாக யாராலும் பழகிவிட முடியாது, மீறிப் பழகி விட்டால் அவரை விடச் சுலபமாக உங்களால் யாரிடமும் பழகிவிட முடியாது.

இணையத்தில் உள்ள கவிதைகளையும், கட்டுரைகளையும் வாசித்தவர்களுக்கு, அவரைப் பற்றிய அறிமுகம் தேவைப்படாது. மானுடத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் அவரின் கவிதைகளைப் படிப்பதன் மூலமாக நம்மால் உணர முடியும்.

அவரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் புரிந்து கொள்வதற்கு நமக்குப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதுமான ஒன்று. தோழர் உக்ரேனுக்கும்,  பாலஸ்தீனத்திற்கு நேரில் சென்று இருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் நம்மை அங்கு கொண்டு நிறுத்தி விடுவார்.

அவரிடம் எதைப் பற்றி பேசினாலும். போதும் என்ற அளவுக்கு  அதைப்பற்றிய கற்றலும், அதை கற்பிக்கும் ஆற்றலும் அவரிடம் எப்பொழுதும் நிறைந்து இருக்கும்.

ஓட்டப்பந்தய பயிற்சியின் போது, இலக்கை அடையும் சமயம் மிகப்பெரிய சோர்வு உண்டாகும், வேகம் குறையும், தோல்வியடைய நேரிடும், அப்போது துவண்டு விடாமல் நம் ஆற்றலை இன்னும் வேகமாக்க நம்முடன் சேர்ந்து ஓடி இலக்கை நோக்கி இழுத்துச் செல்ல ஒரு நபர் தேவைப்படுவார். அப்படி என்னையும், என்னைப் போன்ற பலரையும் இழுத்துச் சென்று கொண்டிருக்கும் தோழர் ஜோசப் ராஜா அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இலக்கை நெருங்கி விட்டோம் தோழர். இதே ஆற்றலோடு பயணிப்போம் 💓💫

தோழமையுடன்

விடிவெள்ளி

Related Articles

Leave a Comment